Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்தியா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 5
Sunday , 16 January 2022
Home » இந்தியாpage 5

இந்தியா

மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து குலுக்கி வரவேற்ற கேரள முதலமைச்சர்

தன்னை நேரில் சந்தித்த கையில்லாத மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து முதலமைச்சர் பினராயி விஜயன் குலுக்கி வரவேற்ற புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் என்பவர், முதலமைச்சரின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார். அங்கு முதலமைச்சரை சந்தித்த அவர், தனக்கு ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த ஒரு தொகையை பேரிடர் நிவாரண தொகையாக வழங்கினார். அப்போது இளைஞரின் கால்களை பிடித்து முதலமைச்சர் குலுக்கினார். பின்னர் இளைஞருடன் ... Read More »

60 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, 60 செயற்கைக் கோள்களை 2ம் கட்டமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக புளோரிடாவில் இருந்து தலா 260 கிலோ எடையிலான 60 செயற்கைக் கோள்களை கடந்த மே மாதம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் தற்போது 2ம் கட்டமாக மேலும் 60 செயற்கை ... Read More »

ஐ.டி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே – கிரிஷ்

நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்தித்திருக்கும் பின்னடைவு தற்காலிமானதுதான் என இன்போசிஸ் முன்னாள் துணை நிறுவனர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையே, ஐ.டி நிறுவனங்களின் தற்போதைய பின்னடைவுக்கு காரணமாகும் என்றும், இதுநாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார். திருச்சி என்.ஐ.டி வளாகத்தில், Third-i என்ற தகவல் திரட்டு கணினி மைய தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்திருக்கிறார். ஆட்குறைப்பு செய்தே ஆக வேண்டும் என இலக்கு நிர்ணயித்து ஐ.டி நிறுவனங்கள் செயல்படுவதில்லை என்றும், ... Read More »

சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவத் பதவி விலகுவதாக அறிவிப்பு

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா எம்.பி.அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், சிவசேனா கட்சியும் இணைந்து களம் கண்டது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, இருகட்சியினரிடையும் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்த சிக்கல் ஏற்பட்டதால், தொடர்ந்து இழுபறி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் எதிர்க்கட்சியினருடன் சில ஆலோசனைகளை மேற்கொண்டது. அதில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினால், ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி ... Read More »

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திரமான, நேர்மையான தேர்தலைநடத்தி ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலராக திகழ்ந்தவர் சேஷன் என்று ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More »

ஆந்திராவில் கடலில் குளிக்கச் சென்ற 5 இளைஞர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கடல்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் 5 பேர் கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை காணவில்லை என்று மீட்புக் குழுவினர் கடலுக்குள் தேடி வருகின்றனர். ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வங்கக் கடலில் எழுந்த புல்புல் புயலால் கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதையறியாமல் கடலில் குளிக்க சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More »

கர்நாடகாவில் இடைத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று மனுத்தாக்கல் தொடங்குகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி தனது அரசின் மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 17 பேர் கலந்து கொள்ளாததால் அரசு கவிழ்ந்தது. இதனால் விதிகளை மீறியதாக 17 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதனிடையே, 15 தொகுதிகளுக்கு கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல், டிசம்பர் 5ம் தேதிக்கு ... Read More »

புல் புல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மேற்கு வங்கம் அருகே கரையை கடந்த புல் புல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையைக் கடந்த போது ஏற்பட்ட சூறாவளி மற்றும் கனமழையால் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கும் வயல்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டது. மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாயந்தன. பெரும்பாலான உயிர்ச்சேதங்கள் மரங்கள் சாய்ந்ததால் தான் என்று கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் 10 பேர் பலியான நிலையில் வங்காள தேசத்திலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 ... Read More »

கார் மீது மோதுவதைத் தவிர்க்க மூன்று இருசக்கர வாகனங்களில் மோதி, சரக்கு ரயிலில் சிக்கிய டேங்கர் லாரி

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே டேங்கர் லாரி ஒன்று கார் மீது மோதுவதைத் தவிர்க்க மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த போது எதிரே வந்த சரக்கு ரயில் அவற்றின் மீது அதிக வேகத்துடன் மோதியது. சரக்கு ரயிலில் சிக்கி மூன்று இருசக்கர வாகனங்கள் நசுங்கின. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் சரக்கு ரயிலும் தடம் புரண்டது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ரயில் ஓடிய பின்னரே நின்றது. ரயில் ஓட்டுனருக்கு என்ன ... Read More »

ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து அமைப்புகள் ஆலோசனை

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கான மாடலை விஷ்வ இந்து பரிஷத் வெளியிட்டுள்ளது. வி.ஹெச்.பியின் உதவியுடன் ராமர் கோவிலை கட்டுவதற்கான பணியில் ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆதி காலத்தில் இருந்ததாக கருதப்படும் ராமர் கோவிலின் மாதிரியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ப்ளூபிரிண்ட் ஒன்றுதான் தற்போது ராமர் கோவிலாக வடிவம் பெற உள்ளது. ராமர் கோவிலை வடிவமைப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளனன. 212 தூண்களுடன் கோவில் கட்டப்படும் என்றும், 106 தூண்கள் வீதம் இரண்டு கட்டங்களாக கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ராமர் திருவுருவ சிலைக்கான கர்ப்ப ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com