Monday , 18 February 2019
Home » இந்தியாpage 5

இந்தியா

மத்திய மந்திரி அனந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்

11

உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார். மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். வயது 59. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது. இந்த நிலையில் மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ... Read More »

உலக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது!

NARENDRAMODI

உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்துக்காகப் பல்வேறு நாடுகளில் இந்திய வீரர்கள் போரிட்டு உயிர்த்தியாகம் செய்தனர். முதல் உலகப்போர் முடிந்ததன் நூற்றாண்டு நிறைவையொட்டி இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதலாம் உலகப் போரில் இந்தியா நேரடியாக ஈடுபடாவிட்டாலும் உலக அமைதிக்காக இந்தப் போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றும் உலகின் பல்வேறு நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ... Read More »

முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

chhattisgarh

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பலத்த ... Read More »

இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

ni

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதி நவீன பீரங்கிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 எம்777 ரக பீரங்கிகளை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.இதேபோல் இந்தியாவின் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடம் ரூ.4,366 கோடிக்கு கே9 வஜ்ரா என்னும் நவீன ரக பீரங்கியும் வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.மேலும் ராணுவத்தில் தற்போதுள்ள பழைய பீரங்கி வாகனங்களை அகற்றும் வகையில் ... Read More »

சபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு!

sabari

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு தரிசனம் செய்வதற்காக 539 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 ... Read More »

பா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் !!

NARENDRAMODI

பா.ஜ.க. ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சட்டீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். சட்டீஸ்கர் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜக்தல்பூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பா.ஜ.க, ஆட்சியில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், ஜாதி அரசியல் மிகுந்திருந்த சட்டீஸ்கரில் தற்போது அது காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் தன் மீது அதிருப்தியில் இல்லை என்றும், மாறாக தற்போதும் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நக்சல்களுக்கு எதிராக அரசு எடுக்கும் ... Read More »

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவுவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை!

ra

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவுவதற்காகவே பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. நேற்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பல லட்சம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீதான மிகப்பெரிய கொடூரத் ... Read More »

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் பதவி பறிப்பு!

Ashok-Anandjpg

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன் புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாகச் சொத்துகளைக் குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவரது மகனும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக் ஆனந்த் ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com