சிவில் நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்கிறது. இஸ்லாமாபாத், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49). இவர் இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரி என்றும், தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்தார் என்றும் பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்தி, 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் 3-ந்தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு 22 நாட்கள் கழித்து தெரிவித்தது. ஆனால் குல்பூஷண் ஜாதவ், இந்திய கடற்படையின் ஓய்வு ... Read More »
இந்தியா
சபரிமலை மற்றும் ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!
சபரிமலை விவகாரம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான 2 வழக்குகளில், நாளை காலை தீர்ப்பளிக்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிவுற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, நாளை காலை 10.30 மணிக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் ... Read More »
ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்
தெலங்கானாவில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிவிட்டு, பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை ... Read More »
டெல்லியில் காற்று மாசின் அளவு மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது
டெல்லியில் காற்று மாசின் அளவு “தீவிரம்” என்ற அளவுக்கு சென்றுள்ள நிலையில், காற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால் மேலும் மோசமடையக்கூடும் என அஞ்சப்படுகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு புதன்கிழமை அதிகாலை, தீவிரம் என்ற அளவுக்கு சென்றது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் 425 புள்ளிகளாக இருந்த காற்று மாசின் அளவு, புதன்கிழமை 6.40 மணியளவில் 457 புள்ளிகளாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. கடந்த ... Read More »
சிவசேனாவிடம் பிடிவாதம் பிடிக்கும் தேசியவாத காங்கிரஸ்
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவிடம் முதலமைச்சர் பதவி கேட்டு சிவசேனா வைத்த கோரிக்கையே, தேசியவாத காங்கிரஸ் மூலம், இன்று அக்கட்சிக்கே, திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மகாராஷ்டிராவில், போதிய பெரும்பான்மை இல்லாததால், எந்த கட்சியும் ஆட்சியமைக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலானது. இருப்பினும், இதை எதிர்த்து சிவசேனா வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அக்கட்சியுடனான கூட்டணி பற்றி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முடிவெடுக்க இயலாத சூழலே நிலவுகிறது. இந்நிலையில், சிவசேனாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் வழங்குவதில் நீடித்த தேக்கம் ... Read More »
கார்ப்ரேட் தரப்பிலிருந்து 75 சதவீதம் நிதி பெற்றுள்ள பாஜக
பாஜக கடந்த நிதியாண்டில் ரூ.741 கோடியை தேர்தல் நிதியாக பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டிற்கான தேர்தல் வரவு செலவு கணக்குகளை பாஜக தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளது. இதில், 2018-2019ல் ஆன்லைன் மற்றும் காசோலைகள் மூலம் ரூ.741 கோடியை நிதியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 356 கோடி ரூபாய் டாடா நிறுவனத்திடமிருந்தும், 55 கோடி ரூபாய் புரூடெண்ட் அறக்கட்டளையிடமிருந்தும் பெற்றுள்ளது. பாஜகவின் தேர்தல் நிதியில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 2017-2018ல் 26 கோடியாக இருந்த காங்கிரஸ் ... Read More »
ஏழுமலையான் கோவிலில் கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்துக்கான பௌர்ணமி கருடசேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி மலையப்ப சுவாமி தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தபோது, இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இந்த சுவாமி வீதி உலா இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது Read More »
மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி…
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அரசை அமைக்க சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மராட்டியத்தில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை புதிய அரசமைக்க வரும்படி ஆளுநர் பகத் சிங் கோசியாரி முதலில் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க விரும்பவில்லை என அக்கட்சி தெரிவித்துவிட்டது. இதையடுத்து 2ஆவது பெரிய கட்சி என்ற வகையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த சிவசேனா எம்எல்ஏ ... Read More »
பிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதையொட்டி, பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் ... Read More »
மராட்டியத்தை பாஜகவிடம் தாரை வார்த்து விட்டது காங்கிரஸ் – ஆம் ஆத்மி
மராட்டியத்தை பாஜகவிடம் தட்டில் வைத்து காங்கிரஸ் தாரை வார்த்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ப்ரீத்தி ஷர்மா, ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், நாட்டை விட கட்சியின் நலனுக்கே காங்கிரஸ் எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது என்று புகார் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பிராந்திய அளவில் கூட்டணி அமைக்க மறுப்புத் தெரிவித்து, பாஜக மிகப்பெரிய வெற்றி பெற காங்கிரஸ் உதவி செய்தது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடே அக்கட்சியை விரைவில் அழித்து விடும் என்றும் கூறியுள்ளார். மராட்டிய காங்கிரஸ் ... Read More »