Thursday , 21 March 2019
Home » இந்தியாpage 4

இந்தியா

4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

3

எல்லையில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர், ஜம்மு-காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து, சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த குண்டுகள் பூஞ்ச் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகளின் அலுவலகம் அருகே விழுந்தன. இதையடுத்து, இந்திய வீரர்களும் பாகிஸ்தான் படைக்கு பதிலடி கொடுத்தனர். இதனிடையே, சோபியான் மாவட்டத்தின் நாடிகாம் கிராமப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ... Read More »

ராணுவ ஆயுத குடோன் அருகே வெடிவிபத்து!

2

மகாராஷ்டிர மாநிலத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ... Read More »

தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

mo

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலை உலக வங்கி தயாரித்து அளிக்கிறது. கடந்த மாதம் வெளியான இந்த பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் கனவாக அமைந்துள்ளது.இந்த கனவை நனவாக்குவதற்காக மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டத்துக்கு ... Read More »

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

Maoists

காஷ்மீரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் போது 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ரேபான் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக காவல்துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் உடல் கைப்பற்றியதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ... Read More »

சபரிமலை கோவில் பகுதிகளில் 144 தடை

4

சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் ... Read More »

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்!

roc

தகவல் தொடர்புக்காக தயாரிக்கப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனான இஸ்ரோ, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிசாட்-29 செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. 3 ஆயிரத்து 423 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி2 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 5.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் ... Read More »

வருமான வரி வழக்கு சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

court

வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சோனியா, ராகுல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி மறுமதிப்பீடு கணக்கை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட், சாவ்லா ஆகியோர் கொண்ட அமர்வு, வருமான வரித்துறைக்கு இதற்கான அதிகாரம் ... Read More »

சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 மனுக்கள் மறுஆய்வு !

sabari

சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதியில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம் என செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கோவில் நடை திறக்கப்பட்டபோது, பெண்கள் சிலர் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி ... Read More »

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்தது!

modi

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள பிலாஸ்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்ததாகத் தெரிவித்தார். மேலும், சாலை அமைத்தல், மின்வழங்கல், ரயில்வே மின்மயமாக்கல், பள்ளிகள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை முடிப்பதற்குத் தேவையான நிதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் ... Read More »

பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள்

111

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் நாளை முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com