Monday , 18 February 2019
Home » இந்தியாpage 30

இந்தியா

ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி

jpg

கடந்த மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது.காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே ... Read More »

பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார

narendra-modi-fitness-video_1200

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்தார். அதன் பேரில் தனது உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். யோகா தவிர தான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ... Read More »

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்! 4 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

Indian-Army-Kashmir

ஜம்முகாஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற ... Read More »

ஜம்மு காஷ்மீர் – துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழப்பு

jammu kashmir

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இரவில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த ... Read More »

அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராகுல்!!

rahul_gandh

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணையில் ராகுல்காந்தி தானேவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் மகாத்மா காந்தியை கொன்று விட்டதாக கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை வாபஸ் ... Read More »

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு! 7 பேர் ஆவணங்களை கேட்கிறது மத்திய அரசு!!

Rajiv-Gandhi-

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, வழக்கு சார்ந்த தகவல்களை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மத்திய அரசு ... Read More »

கர்நாடக இடைத்தேர்தல் ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்பு!!

karnataka election

கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.கர்நாடக சட்டசபைக்கு கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4–ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்த தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ... Read More »

பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி

nirav-modi

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனையை அடுத்து, ... Read More »

பிரதமர் மோடி விடுத்த அழைப்பை சீன அதிபர் ஜின்பிங் ஏற்றார்

Prime_SECVPF

இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை சீன அதிபர் ஜின்பிங் ஏற்றுக்கொண்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனாவில் உள்ள கிங்தாவோ நகருக்கு சென்ற பிரதமர் மோடி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அப்போது அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ... Read More »

கர்நாடகத்தில் பலத்த மழை !!

rain

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.குடகு மாவட்டத்தில் 2 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டிவருவதால், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com