தலைநகர் டெல்லியை அச்சுறுத்தி வந்த காற்று மாசு இன்று பரவலாக குறைந்திருக்கிறது. நேற்று முதலே காற்று நன்றாக வீசுவதன் எதிரொலியாக, இன்று காலை 6.30 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு, 211ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டிருப்பதால், பள்ளிகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டன. டெல்லி காற்று மாசு குறித்து, மத்திய சுற்றுச்சூழல்த்துறை அமைச்சகம், உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறது. இதில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், ... Read More »
இந்தியா
சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு
சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக நிலக்கல்லில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு சபரிமலை ஐயப்பன் கோவில் திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை ... Read More »
மருத்துவர்களை தாக்கினால் சிறை… விரைவில் சட்டத்திருத்தம்
பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது உறவினர்கள் மருத்துவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க விரிவான சட்டம் கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, மருத்துவப் பணியாளர்கள் ... Read More »
எஸ்ஸார் வழக்கு -உச்சநீதிமன்றம் தீர்ப்பு
எஸ்ஸார் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் கையகப்படுத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முன் வந்தது. அதற்கான ஒப்புதலை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வழங்கியது. இந்த தொகையை பங்கிட்டுக் கொடுப்பதில் பிரச்சனை நீடித்ததால், கடனாளர்கள் குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடன் தொகையை பிரிப்பதில் தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு ஆணையம் ... Read More »
டெல்லியில் கட்டணம் செலுத்தி தூய்மையான காற்றை சுவாசிக்கலாம்
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், சுத்தமான காற்றை சுவாசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள கட்டணத்துடன் கூடிய ஆக்சிஜன் பாருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. தெற்கு டெல்லியின் சாக்கெட் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் பாருக்கு வரும் வாடிக்கையாளர்கள், லெமன்கிராஸ், ஆரஞ்சு, லவங்கப்பட்டை, பெப்பர்மிண்ட், யூக்லிப்பிட்டஸ், லாவண்டர் உள்ளிட்ட 7 நறுமணங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதனோடு சேர்த்து ஆக்சிஜனை சுவாசிக்கலாம். இதுபற்றி பேசிய ஆக்ஸிஜன் பார் உரிமையாளர் அஜய் ஜான்சன், நாளொன்றுக்கு பத்து, பதினைந்து வாடிக்கையாளர்கள் வருவதாக தெரிவித்திருக்கிறார். Read More »
ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி அமலாக்கதுறையும் ப. சிதம்பரத்தை கைது செய்தது. இந்த நிலையில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், வழக்கில் சிதம்பரம் முக்கிய பங்காற்றி இருக்கிறார் ... Read More »
சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
சபரிமலை தீர்ப்பு சபரிமலை தீர்ப்பில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது தனிப்பட்ட உரிமைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் இடையிலான வழக்கு – தலைமை நீதிபதி தீர்ப்பு இந்துப் பெண்களுக்கு மட்டுமானது என்று வரையறுத்துவிட முடியாது – தலைமை நீதிபதி பெண்களுக்கான வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதம் சார்ந்த இடங்களுக்கும் பொருந்தும் – தலைமை நீதிபதி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு கூடுதல் ... Read More »
இறால் பதனிடும் ஆலையில் வாயுக் கசிவு -நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு உடல்நல பாதிப்பு
ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள இறால் பதனிடும் தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். பலருக்கு மூச்சடைப்பு தலை சுற்றல் வாந்தி மயக்கம் என உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனைவருக்கும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். பிளீச்சிங் பவுடருடன் தண்ணீரைக் கலந்ததால், மயக்கம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அமோனியா வாயு, குளோரின் என முரண்பட்ட தகவல்களையடுத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். Read More »
இந்திய -அமெரிக்க முப்படையினர் ஆந்திராவில் கூட்டுப் பயிற்சி
இந்திய அமெரிக்கப் படைகள் ஆந்திர கடலோரத்தில் கூட்டுப் பயிற்சியில் 13ம் தேதி முதல் ஈடுபட்டு வருவதாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. முதன் முறையாக இருநாட்டு முப்படையினரும் மனிதாபிமான சேவை, பேரிடர் மீட்பு, போன்ற பணிகளுக்காக ஆந்திர கடலோரம் வரும் 21ம் தேதி வரை ஒத்திகையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2 கம்பெனி ராணுவப் பட்டாலியன் படைகள், கடற்படையினரின் 3 போர்க் கப்பல்கள், மருத்துவக் குழுக்கள் ,இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.இதே போன்று அமெரிக்க போர்க்கப்பல்களும் விமானப் படையினரும் ... Read More »
அடர்த்தியான காற்று மாசு தொடர்வதால் மூச்சுத்திணறும் தலைநகரம்
தலைநகர் டெல்லியில் மூடு பனி, காற்று மாசு போன்றவை அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் அறிவுறுத்தலின்படி இன்றும் நாளையும் என்.சி.ஆர், குருகிராம், ஃபரிதாபாத், காசியாபாத் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, air quality index எனப்படும் காற்றின் மாசு நிலை 456 புள்ளிகளாக இருந்தாதக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. நிலைமை மேலும் மோசமாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை மாசு நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சாலைகளில் odd-even ... Read More »