Monday , 18 February 2019
Home » இந்தியாpage 3

இந்தியா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி!

4

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர். விவசாய கடன் ரத்து, விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று இந்த போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ... Read More »

பாஜக இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும்

5

இந்தியாவை விட்டு பா.ஜனதா வெளியேற வேண்டும் எனவும் பா.ஜனதா இல்லாத நாடு சிறப்பாக இருக்கும் எனவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.  மேற்கு வங்காள மாநிலம் பலராம்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது:- மாநில கவர்னர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜனதா பணியில் நியமித்துள்ளது. எனவே இந்தியாவை விட்டு பா.ஜனதா வெளியேற வேண்டும். பா.ஜனதா இல்லாத இந்தியா சிறப்பாக இருக்கும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ... Read More »

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 6-தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கப்ரான் படாகுண்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களும் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். கொல்லப்பட்ட ... Read More »

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு பெரிய அளவில் சாதிக்கிறார்கள்

mo

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, பெரிய அளவில் சாதிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இதுதான் புதிய இந்தியா என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். 50-வது மன் கீ பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மன் கீ பாத் தொடங்கப்பட்டதன் பின்னணியை விவரித்தார். மன் கீ பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி, 130 கோடி மக்களுக்குமானது என்றும், இதில் அரசியல் இல்லை என்றும் மோடி விளக்கமளித்தார். மன் கீ ... Read More »

அடுத்த 6 மாதத்திற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் தேவையில்லை

5

அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதன் வசம் உள்ள உபரி மூலதனத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை தெரிவித்தார். மேலும், பணப்புழக்கம் ... Read More »

தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர் தற்போது என் தாயைப் பழிக்கின்றனர்

NARENDRAMODI

தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர், தற்போது தன் தாயைப் பழிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தார்பூரில் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை மாமா என அவதூறு செய்பவர்கள், தங்கள் சொந்த மாமாக்களான குவாத்ரோச்சி, வாரண் ஆண்டர்சன் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும் என விமர்சனம் செய்தார். 4 தலைமுறை காங்கிரஸ் ஆட்சியையும், தேநீர் வியாபாரியான தனது 4 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறிய பிரதமர் நரேந்திரமோடி தம்முடைய ... Read More »

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாள்களுக்கு நீட்டிப்பு

3

கேரள மாநிலம் சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா பகுதிகளில் 144 ... Read More »

நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு திட்டம்!

mo

நாடுமுழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். சேலம்-கோவை நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், நாட்டின் உள் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் முதல் படியாக விளங்கும் என்று தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க எரிசக்திக்கான தேவையும் உயர்கிறது என்று தெரிவி;த்தார். எனவே சுற்றுச்சூழலை பாதிக்காத ... Read More »

ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது மோடி அரசு

4

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தூர் நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  “ தற்போதைய அரசாங்கத்தினால் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிரமாண்ட தோல்வியை சந்தித்து உள்ளது. மோடியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தை எட்டிவிட்டது.இந்த ஆட்சியில் நாடாளுமன்றம் மற்றும் சி.பி.ஐ. போன்ற அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை சிறுமைப்படுத்தப்படுவதை நாடு கண்கூடாக காண்கிறது. மேலும் மோடி அரசு மிகுந்த ஜாக்கிரதையுடன் திட்டமிட்டு ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ... Read More »

ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்த விபத்து

5

ஒடிசாவில் மகாநதி ஆற்றுப் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓடிசா அருகே கட்டாக் புறநகர்ப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மகாநதி ஆற்றுப் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆற்றில் தண்ணீர் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com