Monday , 18 February 2019
Home » இந்தியாpage 20

இந்தியா

டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் பெயர்

kejriwal

டெல்லி அரசின் மூன்றாமாண்டு நிறைவு விழா குறித்து கடந்த ஃபிப்ரவரி மாதம் அரசு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் தாம் தாக்கப்பட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தம்மை சரமாரியாக தாக்கியதாகவும் தலைமைச் செயலாளர் அன்{ பிரகாஷ் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்ததோடு தாக்குதல் சம்பவம் ஏதும் இடம்பெறவில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அன்{ தாக்கப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனீஷ் சிஸோடியா, ஆம் ஆத்மி கட்சியின் 11 ... Read More »

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு சவால்

rahul

அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பிடர் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு தாம் பிரதமர் மோடிக்கு சவால் விடுப்பதாகவும், ஆனால் தம்முடைய சவாலை பிரதமர் ஏற்க மாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் பொய் உரைப்பதாக ... Read More »

கேரளாவில் கனமழை சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு, தடை!!

1

கேரளாவில் கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா மாவட்டங்களில், பள்ளிகள் தற்காலிக நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பம்பா மற்றும் அனத்தோடு அணைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், பம்பா நதியில் மீண்டும் ... Read More »

ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

death

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ... Read More »

பாகிஸ்தான் சிறையில் இருந்து 26 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை!!

Fisherman

இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலரை பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 26 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மீனவர்களின் இந்தியா திரும்புவதற்கான பயண செலவை எதி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரி கூறுகையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நல்லெண்ண அடிப்படையில் 26 மீனவர்களை விடுதலை செய்துள்ளனர். ... Read More »

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்!!

Somnath

பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (89). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று ... Read More »

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, 100 கோடி ரூபாய் நிவாரணம்!

Kerala

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். மேலும் 100 கோடி ரூபாய் உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். துண்டிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தியும், சாலைகளை சீரமைத்தும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மிகவும் மோசமான பகுதிகளில் சிக்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளம் ... Read More »

சுதந்திர தினத்தை சீர்குலைக்க, தீவிரவாதிகள் சதித்திட்டம்!!

terrorist

நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் கடந்த 6ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதில், தீவிரவாத செயல்களை நிகழ்த்தக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது அப்துல்லா பாசித் மற்றும் முகமது அப்துல் காதீர் ஆகிய இரண்டு இளைஞர்களும் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்த சதித்திட்டம் ... Read More »

கேரளாவில் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு, வெளியேறி முகாம்களில் தஞ்சம்!

kerla rain

கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தவரின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளா வருகிறார்.அரைநூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால், கேரள மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கடலோர தகவல் சேவை மையம், கேரளாவில் 15 ஆம் தேதி வரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கேரளாவில் கனமழை, ... Read More »

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி – உளவுத்துறை எச்சரிக்கை

cbi

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com