Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்தியா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 2
Sunday , 16 January 2022
Home » இந்தியாpage 2

இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து எந்நேரமும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற, நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் பவன்குமார் குப்தா, முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தான். அதை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ... Read More »

பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு சிவசேனா ஆதரவு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா ஆதரித்து வாக்களித்திருக்கிறது. அண்மையில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசோடு இணைந்து, மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 18 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா, ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற, பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றும் வகையிலேயே, மசோதாவை ஆதரித்திருப்பதாக, சிவசேனா ... Read More »

இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கொடூரமாக கொலை

இந்திய வம்சாவெளியை சேர்ந்த 19 வயது மாணவி, அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இளம் பெண், சிகாகோ இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை பயின்று வந்தார். இதனிடையே தனது மகளை காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்கலைகழக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அவரது காரின் பின் இருக்கையில் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ... Read More »

பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராப்கம் Drabgam என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. இதில், இர்ஃபான் அகமது ரத்தர், இர்ஃபான் ஷேக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த இருவரும் மிகவும் ஆபத்தான, தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் ... Read More »

கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது-இஸ்ரோ சிவன்

கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளும், அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களும் நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் இதற்கான 26 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று காலை 7.28 மணிக்கு தொடங்கி ... Read More »

மும்பை தாக்குதல் நினைவு நாள்….

மும்பை தாக்குதலின் 11-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இன்று காலை ஆளுநர் கோஷ்யாரி, முதலமைச்சர் பட்னாவிஸ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல்வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் ... Read More »

கல்கி சாமியார் ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

ஆந்திராவில் உள்ள கல்கி சாமியார் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய கல்கி ஆசிரமத்தில் கடந்த மாதம் ஆசிரமத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் 94 கோடி ரூபாய் ரொக்கம், 24 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு பணம் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் வருமான வரித்துறையினர் நான்கு ... Read More »

முடிவுக்கு வருகிறது அரசியல் குழப்பம்…

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதியாகி உள்ளது. இக்கட்சிகள் நாளை ஆட்சியமைக்க உரிமை கோர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதையடுத்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 3 ... Read More »

பிரதமருடன் சரத்பவார் இன்று சந்திப்பு..! மராட்டிய அரசியலில் பரபரப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அமைவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் சந்திக்க இருப்பது, மராட்டிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்பட்ட நிலையில், சோனியா காந்தியை கடந்த திங்கட்கிழமை சந்தித்துப் பேசிய சரத்பவார், அவருடன், மராட்டிய அரசியல் பற்றி பேசவில்லை என்றார். இதனால், சிவசேனா தரப்பு, கடும் குழப்பத்திலும், அதிருப்தியிலும் ஆழ்ந்திருப்பதாக தகவல் ... Read More »

நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் எம்பிஏ மாணவி

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனது நடனத்தின் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்பிஏ மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. புனேவில் எம்பிஏ படித்துவரும் சுபி ஜெயின் என்ற மாணவி 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக இந்தூர் வந்துள்ளார். அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை கண்ட மாணவி சுபி ஜெயின், அதனை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட முயன்றார். அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகிறார். தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதையும், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com