Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்தியா | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 10
Friday , 1 July 2022
Home » இந்தியாpage 10

இந்தியா

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றுக்கொண்டார். புதுடெல்லி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று ... Read More »

காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி

காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி விடுத்துள்ளது. மும்பை, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா, காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையல்ல என்று தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்றது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிகள் இணைந்து 161 இடங்களில் ... Read More »

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு, இயல்பு வாழ்க்கை முடக்கம்

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த ஐந்து தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதுகாப்பு படையினர் நகரின் முக்கிய வீதிகள், மற்றும் இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில், காஷ்மீரைச் சாராதவர்களை தாக்க பயங்கரவாதிகள் ... Read More »

கடல் மட்ட நீர் உயர்வால் இந்தியாவில் 3.6 கோடிபேர் பாதிக்கப்படுவர்

tகடல் மட்ட நீர் உயர்வால் இந்தியாவில் 3.6 கோடிபேர் பாதிக்கப்படுவர் என புதிய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. புவி வெப்பமயமாவதை தடுக்கத் தவறினால் கடல் நீா் மட்டம் மேலும் அதிகரித்து வரும் 2050-ஆம் ஆண்டில் 3.6 கோடி இந்தியா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால் மற்றும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்படாவிட்டால், 30 கோடி மக்கள் வசிக்கும் நிலம் 2050 க்குள் வெள்ளத்தில் மூழ்கும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வு ஒன்று ... Read More »

எஸ்.ஏ.பாப்டேவை புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல்: நவ.18ல் பொறுப்பேற்பார் என அறிவிப்பு

எஸ்.ஏ.பாப்டேவை புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல்: நவ.18ல் பொறுப்பேற்பார் என அறிவிப்பு புதுடெல்லி: புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 18ம் தேதி பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தற்போதைய மூத்த நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பெயரை மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த அக்டோபர் 18ம் தேதி பரிந்துரை செய்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை ... Read More »

டெல்லி அரசுப் பேருந்தில் இன்று முதல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்!

டெல்லி அரசுப் பேருந்தில் பெண்கள், இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்.29 ம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் இந்தத் திட்டம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பெண்கள் டிக்கெட் வாங்காமல் ... Read More »

ஜம்மு-காஷ்மீர் 31 ஆம் தேதி முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறும் கவர்னர்கள் பதவி ஏற்பார்கள்

ஜம்மு-காஷ்மீர் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறும். கவர்னர்கள் பதவி ஏற்று கொள்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்து உத்தரவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறும்,. அதன் ... Read More »

பகத் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள்

பகத் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்; பிரதமருக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள் விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ... Read More »

தேசிய செய்திகள்வலுவடைந்து வரும் ‘கியார்’ புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வலுவடைந்து வரும் ‘கியார்’ புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் மையப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டராக ... Read More »

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ! தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ! தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெலுங்கானா மாநில பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை தொடங்குவதற்கு முன்னதாக, கவர்னர் மாளிகைக்கு வந்திருந்த பழங்குடியினப் பெண்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துரையாடினார். இதன் பின்னர் அவர், அப்பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தார். பழங்குடியின பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப அப்பெண்களுடன் கை கோர்த்துக்கொண்டு நடனமாடிய காட்சிகளை தமிழிசை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com