Monday , 18 February 2019
Home » இந்தியாpage 10

இந்தியா

பேரிடர் காலங்களில் ஜி.எஸ்.டி.யுடன் புதிய வரி!

2

பேரிடர் காலங்களில் ஜி.எஸ்.டி.யுடன் புதிய வரி விதிப்பது தொடர்பாக, 7 மந்திரிகள் அடங்கிய குழு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி. வரி கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம்; தேதி அமல்படுத்தப்பட்டது. அவ்வப்போது, வரி தொடர்பாக புதிய முடிவுகளை எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலின் 30-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ... Read More »

பெட்ரோல், டீசல் விலைதொடர்ந்து உயர்வு வாகன ஓட்டிகள் அவதி!!

petrol

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ... Read More »

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து-மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு ஆகியவை தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கு ... Read More »

லோக்பால் அமைப்பின் தலைவர் உறுப்பினர்களை தேர்வு, செய்ய 8 பேர் கொண்ட குழு!

1

லோக்பால் அமைப்புக்கான தலைவர், மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இதேபோல் மாநில அளவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்தா சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா ... Read More »

ஆண்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

supreme_court

தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என்றும், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தகாத உறவு விவகாரத்தில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் மாற்றம் கொண்டு வரக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது குற்றம் இல்லை என்றும், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் ... Read More »

இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு சுங்கவரி 10 சதவீதம் வரை உயர்வு

2

ரூபாய் மதிப்பை அதிகரிக்கும் வகையில், 19 பொருட்களுக்கான சுங்கவரி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகியவற்றின் விலை உயருகின்றன.ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2 புள்ளி 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை சரி செய்வதற்கு, இறக்குமதியை குறைக்கும் விதத்தில் அத்தியாவசிய தேவையற்ற 19 பொருட்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏசி, வீட்டுப் பயன்பாட்டுக்கான ஃபிரிட்ஜ், 10 கிலோவுக்கு குறைவான ... Read More »

அயோத்தியில்பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கு! உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!!

court

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளிக்க உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா அமைப்பு மற்றும் ராம்லாலா அமைப்பு ஆகியவை பிரித்துக்கொள்ள வேண்டும் என 2010ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ... Read More »

எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு பதவி உயர்வில்இடஒதுக்கீடு தரமுடியாது!

high

அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரமுடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணி பதவி உயர்வுகளில் எஸ்.சி. , எஸ்.டி பிரிவினருக்கு 22 .5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. மேலும், எஸ்.சி , எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வு நடவடிக்கை கடந்த 2006 -ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு கோரியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா ... Read More »

அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்!

ada

அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் தொடர்பான வழக்கு தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது என்றும் ஆதார் கொண்டு வந்ததற்கான நோக்கம் சரியானது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆதாருக்காக அடிப்படை தகவல்கள் மட்டுமே சேகரிப்பது போதுமானதாக இல்லை என்றும் ஆதாருக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாக்க வலிமையான சட்டம் தேவை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அடையாளம் இல்லாதவர்களின் ... Read More »

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் பத்திரமாக மீட்பு!!

h

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும், பனிப்பொழிவும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து குலுமணாலிக்கு சுற்றுலா சென்ற 70 பேர் இதில் சிக்கி கொண்டனர். லாகாஸ் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிக்கு மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்காக ரூர்கேசா ஐ.ஐ.டி.யில் இருந்து சென்ற 45 மாணவர்கள் பனிப்பொழிவில் சிக்கி இருக்கலாம் என்றும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com