Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இந்தியா ஹெத்து …எதிர் டீமு டெத்து ; மண்ணை கவ்வியது பாகிஸ்தான் … | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » இந்தியா ஹெத்து …எதிர் டீமு டெத்து ; மண்ணை கவ்வியது பாகிஸ்தான் …

இந்தியா ஹெத்து …எதிர் டீமு டெத்து ; மண்ணை கவ்வியது பாகிஸ்தான் …

india-v-pakistan-icc-champions-trophy_4a9b039e-494b-11e7-9f7a-23d54b55bc46இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஷிகர் தவான் 68 ரன்களிலும், ரோஹித் சர்மா 91 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

விராட் கோலி, யுவராஜ் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்தது. கோலி 68 பந்துகளில் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

மழை காரணமாக, பாகிஸ்தான் வெற்றி பெற டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 289 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தொடக்க வீரர் அசார் அலி நிதானமாக ஆடி 50 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஸ்குமார் ஆகியோரின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.

33.4 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால்124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றியை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com