Tuesday , 16 October 2018
Home » விளையாட்டு » இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Ind vs Engவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், கார்டியாவில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது.

முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சொதப்பிவிட்டனர். தொடரை வெல்ல முக்கியமான போட்டி என்பதால் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் இன்று மோதுவது 14-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 13 போட்டியில் இந்தியா 6, இங்கிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com