Sunday , 22 July 2018
Home » இந்தியா » இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா X6

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா X6

Nokia x6ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.நோக்கியா மொபைல் போன்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டது. நோக்கியாவின் முதல் நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட X6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ சர்வதேச வலைத்தளத்தில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் ஷாப் நௌ (Shop Now) பட்டனுடன் இடம்பெற்று பின் விரைவில் எடுக்கப்பட்டது. இந்நிலையில், நோக்கியா X6 ஸ்மார்ட்போன் நோக்கியா மொபைல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டது. இந்திய வலைத்தளத்தில் மொபைல் போனின் யூசர் கைடு, ஸ்மார்ட்போனின் அனைத்து தகவல்களுடன் இடம்பெற்றிருந்தது. இதில், “இந்த ஸ்மார்ட்போன் மத்திய டெலிகாம் துறையின் அனைத்து விதிமுறைகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com