Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான, நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான, நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது!

2உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, நாட்டின் வரி விதிப்பு முறையை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், வெளிப்படையான, வேகமான நடைமுறைகள் வரித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வங்கித் துறையும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு வளம், கொள்கை, செயல்பாடு ஆகியவையே தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளதால், சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com