Monday , 23 October 2017
Home » இந்தியா

இந்தியா

ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்ய அசல் ஆவணம் கட்டாயம் …

BL02SBI_1670921f

புதுடெல்லி: ரூ.50,000க்கும் மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வங்கியில் ரூ.50,000க்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தை முகவர்கள், சீட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், ... Read More »

மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்த ப.சிதம்பரம் …

Chithambaram_1

அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம் என ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். மெர்சல் படத்தில் சில வசனங்களை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கூறியது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மெர்சல் படத்தில் சில வசனங்களை நீக்க பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது என்றும், ஒருவேளை பராசக்தி படம் இப்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். படம் எடுப்போர் ... Read More »

கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை குறைக்க வேண்டும் ; சித்தராமைய்யா…

siddaramaiah1

கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக கைவினை கலைஞர்கள் போராட்டம் நட்தி வருகின்றனர். இந்த சூழலில் காந்திய வாதியும், நாடக கலைஞருமான பிரசன்னா, கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த 7 நாட்களுக்கும் மேலாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பிரசன்னாவின் போராட்டத்திற்கு நடிகர் ... Read More »

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு…

train-fire_37cfb7e4-fd80-11e6-a3af-7fa15638f741

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று குஜராத் மாநிலம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 2ம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபரமதி விரைவு ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் ரயிலின் எஸ் 6 பெட்டி  எரிந்து அதில் இருந்த 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கை விசாரித்த ... Read More »

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதர்…

don-759

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதர் மீது 5 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஆவார். சாராய வியாபாரியான ஸ்ரீதர், 1999ல் தொழில் தகராறில் தனக்கு போட்டியாக இருந்த ராமதாஸ் என்பவரை கொலை செய்தார். தொழில் போட்டி காரணமாக கிருண்னர் என்பவர் 2010ல் படுகொலை செய்யப்பட்டார். 2012ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலர் ... Read More »

டாக்சி டிரைவரை தாக்கிய மலையாள டிவி நடிகைகள் 3 பேர் கைது …

Daily_News_2017_7241283655167

கொச்சியில் ஆன்லைன் டாக்சி டிரைவரை தாக்கிய மலையாள டிவி நடிகைகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள  மாநிலம் கொச்சியில், டிவி நடிகைகள் கிளாரா சிபின் (28), ஷீஜாஅப்சல் (30). ஏஞ்சல்மேரி (36)  ஆகியோர் வைத்திலாவில் இருந்து நேற்று முன்தினம் ஆன்லைனில் ஷேர் டாக்சி புக்  செய்தனர். டாக்சி வரும்போது ஏற்கனவே அதில் ஒரு வாலிபர் அமர்ந்து  இருந்தார். மூன்று பேரும் பெண்கள் என்பதால் டிரைவர் ஷெபிக் அந்த வாலிபரை  முன்பக்க இருக்கைக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால் நடிகைகள் அந்த வாலிபரை இறக்கிவிட  வேண்டும் ... Read More »

ரோஹிங்கயா மக்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவர் : ராஜ்நாத் சிங் தகவல்…

rajnath-singh_13_0_0_0_0_0_1_0_1_0_1

மியான்மரில் ரோஹிங்கயா மக்கள் சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்து வருகின்றனர். இந்த இன மக்களுக்கு அவர்களது சொந்த நாட்டிலேயே பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் உள்ள ரோஹிங்கயா மக்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் ... Read More »

சாமியார் பலஹரி மகாராஜ் மீது பாலியல் புகார் …

swami_falahari_maharaj

ராஜஸ்தானின் அல்வார் பகுதியைச் சேர்ந்த 70 வயது சாமியார் கவுஸ்லேந்திர பிரபனாச்சாரியா பலஹரி மகாராஜ் மீது சத்தீஸ்கர் மாநிலம் பிலஸ்பூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 7 ம் தேதி சாமியாரின் ஆசிரமத்திற்கு சென்ற தனக்கு சாமியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். சட்டம் படித்துள்ள அப்பெண், சாமியாரின் ஆசிரமத்திற்கு நன்கொடை அளிப்பதற்காக சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More »

காவிரியில் உபரிநீர் இருப்பது அரிது ; சித்தராமையா விளக்கம் …

siddaramaiah1

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தக்கூடாது என்பது அரசின் நோக்கமல்ல. அணைகளில் தண்ணீர் இல்லாததால் திறக்கவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று இரவு மைசூரு வந்த முதல்வர், ஹெலிபேடில் செய்தியாளர்களிடம் கூறும்போது, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம் உள்பட நான்கு மாநில அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான ... Read More »

நீதிபதியின் வீட்டில் நள்ளிரவில் நடந்த சிபிஐ சோதனை…

CBI_Central_Bureau_investigation_CBI-770x433

ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் நள்ளிரவில் நுழைந்து சோதனை நடத்த முயன்ற சிபிஐ அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒடிசா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் குதுசி. 2004ம் ஆண்டு இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக சேர்ந்தார். பின்னர், 2008ல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2010ல் சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2012ல் ஓய்வு பெற்றார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இவர் பணியாற்றியபோது, நீதிபதி குதுசி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com