Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இசைமேதை நல்லப்பசுவாமிக்கு நினைவு தூண் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » தூத்துக்குடி » இசைமேதை நல்லப்பசுவாமிக்கு நினைவு தூண் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்!!

இசைமேதை நல்லப்பசுவாமிக்கு நினைவு தூண் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள விளாத்திகுளத்தில் இசைமேதை vlcsnap-2018-07-02-11h20m19s448நல்லப்பசுவாமிக்கு நினைவு தூண் அமைக்கும் இடத்தினை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விரைவில் நினைவு தூண் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடால்குடியை சேர்ந்தவர் நல்லப்பசுவாமிகள். வீரபாண்டிய கட்டபொம்மன் வகையாறவைச் சேர்ந்தவர்.நல்லப்பசுவாமியும், அவரது முன்னோர்களும் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். நல்லப்பசுவாமிகள் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமின்றி, இசைமேதையும் கூட, பாரதியார் பாடல்களுக்கு இசை அமைத்தது மட்டுமின்றி, குருநாதர் இல்லமால் கர்நாடக இசையில் அசத்தியவர் என்ற புகழும் அவருக்கு உண்டு, நல்லப்பசுவாமிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று இசை அறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்;ந்து, விளாத்திகுளத்தில் நல்லப்பசுவாமி சமாதி உள்ள இடத்தில் சுமார் 20லட்ச ரூபாய் மதிப்பில் நினைவு தூண் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகம் பின்புறமுள்ள நல்லப்பசுவாமிகள் நினைவு இடத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் சுதந்திர போராட்ட வீரரும், இசைமேதையுமான நல்லப்பசுவாமிகள் பல்வேறு சிறப்புகளை கொண்டவர், மக்களின் கோரிக்கையை ஏற்று நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது, இந்த மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நினைவு தூண் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கப்பட்டு, 3மாதத்திற்குள் பணிகள் அனைத்து முடிக்கப்பட்டு, திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com