Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » சென்னை » ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

vlcsnap-2015-03-19-09h25m20s241ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் ஜான்சன். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இதனிடையே வீட்டில் தனியாக இருக்கும் பொழுது விஜயலட்சுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அடிக்கடி கணவர் வீட்டில் வரதச்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில் விஜயலட்சுமியின் மரணம் அவருடையே உறவினர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கணவர் ஜான்சன்,மாமியார் மகாலட்சுமி,கணவரின் தங்கை ஜான்சி ஆகியோரை கைது செய்து விஜயலட்சுமி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருமணமான 6 மாதத்தில் புதுமணப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com