Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு!

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு!

1கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கோவை மாவட்டம், ஆழியாறு படுகையின் பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய்;, ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு அக்டோபர் 10 முதல் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com