Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » ஆள் குறைந்தாலும் பலம்குறையாத புனே…

ஆள் குறைந்தாலும் பலம்குறையாத புனே…

image_1487561005-800மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் புனே அணி நிலவரம் எப்படி?

நடப்பு சீசனில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே அணி, மும்பை அணியை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியது. எனினும் அடுத்த 3 ஆட்டங்களில் தொடர் தோல்வியைத் தழுவியதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்தது. பின்னர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கடைசி 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிகள் பட்டிலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது புனே.

அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மித், ராகுல் திரிபாதி, ரஹானே, தோனி நம்பிக்கை அளிக்கின்றனர்.
லீக் சுற்றில் 21 விக்கெட்களை வீழ்த்திய உனட்கட், 18 விக்கெட்களைச் சாய்ந்த இம்ரான் தாஹிர், ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் புனே அணியின் வெற்றியில் முக்கிப் பங்கு வகித்தனர். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவ வீரர் இம்ரான் தாஹிர், ஊருக்குத் திரும்பி விட்டதும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சொந்த நாட்டுக்காக ஆட சென்றுவிட்டதும், அந்த அணிக்கு சற்று பலவீனம் தான். எனினும் இளம் வீரர் ஆடம் ஸம்பா, இம்ரானின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com