Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை குற்றவாளிகள் கைது | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருவள்ளூர் » ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை குற்றவாளிகள் கைது

ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை குற்றவாளிகள் கைது

vlcsnap-2018-07-20-10h59m55s750ஆவடி சுற்றுவட்டார பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து வந்த   குற்றவாளிகள் இருவரை  காவல்துறையினர் கைது செய்து 30 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டில் கொள்ளை அடிக்கும் மர்ம நபர்கள் ஆவடி பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிவதாக ஆவடி காவல் உதவி ஆணையர் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ஆவடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் ராஜன் என்கின்ற காமராஜன் என்பதும் மற்றொருவர் அப்பு என்கின்ற சீனிவாசன் என்பதும் தெரியவந்தது.  இருவரும் ஆவடியில் ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரிடமிருந்தும் 30 தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com