Monday , 20 November 2017
Home » தமிழ்நாடு » ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு…

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு…

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் அறிவிக்கவுள்ளது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

2017_3$largeimg10_Friday_2017_091603818குஜராத் மாநில தேர்தலின் போதே, ஆர்.கே.நகருக்கும் இடைத்தேர்தல் நடைபெறலாம். தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016 -ஆம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. இது பற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com