Monday , 20 November 2017
Home » மாவட்டம் » ஆம்பூர் அருகே திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வு…

ஆம்பூர் அருகே திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வு…

ஆம்பூர் அருகே திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் விடிய விடிய வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

Daily_News_2017_7441021203995வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளின் சுவர்களில் விரிசல் உருவானது. இதனால் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பிரபு என்பவரின் வீட்டில் அதிக அளவு விரிசல் ஏற்பட்டதுடன் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன.

மேலும் ரமேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அத்திமாகுலப்பள்ளியை சுற்றியுள்ள ராலகவுட்டூர், பார்சனஹள்ளி, கரும்பூர் ஆகிய கிராமங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது. நிலஅதிர்வால் இந்த கிராமங்களிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திடீர் நிலஅதிர்வால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com