Sunday , 16 December 2018
Home » இந்தியா » ஆந்திரா- ஒடிசா இடையே கரையைக் கடந்தது டிட்லி புயல்!

ஆந்திரா- ஒடிசா இடையே கரையைக் கடந்தது டிட்லி புயல்!

7அதிதீவிர புயலாக மாறிய டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டிணத்துக்கும் இடையே கரையை கடந்தது.ஒடிசா மாநிலம் கோபால்பூர்க்கு தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலம் கலிங்கப்படினத்தில் இருந்து தென் கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்லி புயல் மையம் கொண்டிருந்தது. விசாகப்பட்டிணம் வானிலை மைய தகவல்களின் படிஇன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திர கலிங்கப்பட்டிணம் இடையே கரையைக் கடந்தது. இதைத் தொடர்ந்து ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. வடக்கு ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிசாவில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகள், ஆந்திரா கலிங்கப்பட்டிணம் பகுதியில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் பெரிய அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் ஒடிஷாவுக்கு 14 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு 4 குழுக்களும் விரைந்துள்ளன.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com