Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி பெருத்த திட்டம

ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி பெருத்த திட்டம

Biometric-tool-தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7 ஆயிரத்து 728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7 ஆயிரத்து 728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ரூபாய் 15 புள்ளி 30 கோடி செலவில் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யலாம் என்று தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த 7 ஆயிரத்து 728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com