Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரம் கொள்ளை | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » புதுக்கோட்டை » அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரம் கொள்ளை

அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரம் கொள்ளை

vlcsnap-2015-03-14-16h37m42s38அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில், தங்கதுரை என்பவர் ஆடிட்டர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர், அறந்தாங்கியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அலுவலகத்தில் உள்ள லாக்கரில் ரூபாய் 50-ஆயிரத்தை வைத்துவிட்டு அலுவலகத்தை பூட்டிச்சென்றுள்ளார். இன்று காலை அலுவலகத்தை திறந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அறந்தாங்கி காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார்;. புகாரின்பேரில்; காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com