வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மதியம் தேசியகொடி அரைக்கம்பத்தில் பறந்துள்ளது.இச்சம்பவம் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது.தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றனர்.இந்திய தேசிய கொடி நாட்டில் துக்கம் அனுசரிக்கும் போது தேசிய தலைவர் அல்லது மாநில அளவில் கட்சி பிரமுகர்கள் இறந்தால் மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் ஆனால் இந்த பள்ளியில் எதற்காக தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர் என்பதும் இதனை யார் செய்தார்கள் என்பதும் தெரியவில்லை இந்திய தேசியகொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் மிகவும் மதிப்புள்ள இந்திய தேசிய கொடியை பள்ளி வளாகத்தில் பள்ளி செயல்படும் நாளில் அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது