Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்!! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்!!

அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்!!

vlcsnap-2018-07-05-13h00m33s572விருதுநகர்மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை குடோனில்பதுக்கி வைத்திருந்த 45 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா பறிமுதல் செய்து நகர் காவல்துறையினர் நடவடிக்கை. பதுக்கி வைத்து விற்பனை செய்த மணிமுத்துகுமார் என்பவர் கைது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற புகையிலைபொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்இந்த தடையை மீறி அவை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை திருச்சுழி மற்றும் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் கடைகளில் தாரளமாக விற்பனை செய்யப்படுவருகிறது.
இந்நிலையில் அருப்புக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் குடோனில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற அருப்புக்கோட்டை சார்பு ஆய்வாளர் வெற்றிமுருகன் தலைமையில் கொண்ட குழு பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் மணிமுத்துகுமார் என்பவர் குடோனில் சோதனை செய்தபோது 5 மூட்டைகளில் இருந்தது அவற்றை பிரித்து சோதனை செய்து பார்த்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பான்மசாலா இருப்பது தெரியவந்தது. அவற்றை அருப்புக்கோட்டை காவல்துறையினர் 5 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தடை செய்யப்பட்ட புகையிலை எடை மொத்தம் 45 கிலோஎன காவல்துறையினர் தெரிவித்தனர். பதுக்கி வைத்திருந்த மணிமுத்துகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com