Friday , 16 November 2018
Home » இந்தியா » அருண் ஜேட்லி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

அருண் ஜேட்லி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

3தொழிலதிபர் விஜய் மல்லையா உடனான சந்திப்பு தொடர்பாக பொய்யுரைத்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். கடன் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், கடனை திரும்ப செலுத்துவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையா உடனான சந்திப்பின் போது இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே அவருடன் பேசியதாக அருண் ஜேட்லி தெரிவித்த நிலையில், அந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், இதுதொடர்பாக அருண் ஜேட்லி பொய்யுரைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.புனியாவே சாட்சியம் எனவும் அவர் கூறினார்.
அருண் ஜேட்லி ஏன் விஜய் மல்லையாவிடம் உரையாடினார்?, கைது நோட்டீஸை, தகவல் தெரிவிக்கும் நோட்டீஸாக மாற்றியது யார்?, அருண் ஜேட்லி இதனை தன்னிச்சையாக செய்தாரா? அல்லது மேலிடத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்த ராகுல் காந்தி, அருண் ஜேட்லி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே அருண் ஜேட்லியுடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை எனவும், நாடாளுமன்ற வளாகத்தில் எதேச்சையாக அவரை சந்தித்ததாகவும், தனது முந்தைய பேச்சு தொடர்பாக விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com