Monday , 20 November 2017
Home » சினிமா » அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க ஓர் அரிய வாய்ப்பு ; கமல் டிவிட் …

அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க ஓர் அரிய வாய்ப்பு ; கமல் டிவிட் …

Kamalஎண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுதினால் வடசென்னைக்கு ஆபத்து எனவும் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க ஓர் அரிய வாய்ப்பு என  கமல் பதிவிட்டுள்ளார்.

கமல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் வட சென்னை கோசஸ்தலை ஆறு இன்னும் முழுவதுவதுமாக சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளதாகவும் அது கூவம் அடையாற்றை விட மிக பெரிய ஆறு, அதன் 1090 ஏக்கர் நிலம் சிந்தையில்லா சுற்றுசூழல் ஆக்கிரமிப்பாளர்களால் இழந்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட சென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் ஆற்றில் கலகின்றன, பற்றாகுறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரொலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணைய் முனையங்களை நட்டாற்றில் கட்டியுள்ளனர்.சமூக ஆர்வலர்கள் பல முறை போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை.

மீனவ மக்கள் தங்கள்  பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்பியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, காமராஜர் துரைமுகத்தை விரிவு படுத்துகிறோம் என்ற போர்வையில் 1000 ஏக்கர் நிலத்தினை சுருட்டும் வேலை நடப்பதாக தான் கேள்விபடுகிறேன் எனவும், நில வியாபாரிகளுக்கு அளிக்கும் முன்னுரிமையை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

வழக்கமாக பெய்யும் மழை போன வருடம் போல இந்த வருடமும் பெய்தாலோ அல்லது அதை விட அதிகமாக பெய்தாலோ வட சென்னைக்கு ஆபத்து வந்து விடும் என எச்சரித்துள்ளார்

Facebook Auto Publish Powered By : XYZScripts.com