Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பழங்காலக் கல்வெட்டுகள் குறித்து பயிற்சி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » கிருஷ்ணகிரி » அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பழங்காலக் கல்வெட்டுகள் குறித்து பயிற்சி

அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பழங்காலக் கல்வெட்டுகள் குறித்து பயிற்சி

vlcsnap-2018-07-28-10h37m48s625கிருஷ்ணகிரி் அரசு அருங்காட்சியகத்தின் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு பழங்காலக் கல்வெட்டுகள் குறித்து, மூன்று நாட்கள் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், மகளீர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை முதுகலை மாணவிகளுக்கு பழங்காலக் கல்வெட்டுகள் குறித்து, மூன்று நாட்கள் குறுகிய கால பயிற்சிகள் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட காப்பாச்சியர் கோவிந்தராஜ், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதனின் வாழ்கை முறை, இந்தியாவில் எழுத்துக்களின் தோற்றம், அந்த எழுத்துக்கும் தமிழ் நாட்டு எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து எடுத்துரைத்தார்.மேலும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளை, தாமே எழுதவும், அக்காலக் கல்வெட்டுகளை படிக்கவும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் விஜயநகர பேரரசு கால கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து படிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com