Monday , 18 February 2019
Home » இந்தியா » அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

Supreme courtஅயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிக்கலில் இருக்கும் 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை, நிர்மோஹி அகாரா, சன்னி சென்ட்ரல் வக்பு வாரியம் மற்றும் ராம்லல்லா விரஜ்மான் ஆகிய அமைப்புகள் மூன்றாக பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த மனுக்களை புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஜனவரி மாதம் விசாரிக்கும் என அக்டோபர் 29-ம் தேதி தெரிவித்தது. அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது

Facebook Auto Publish Powered By : XYZScripts.com