Monday , 23 October 2017
Home » முக்கிய செய்திகள்: » அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் ; ரபேல் நடால் சாம்பியன் பட்டம்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் ; ரபேல் நடால் சாம்பியன் பட்டம்…

hi-res-252c30b8b20c24d68fca25d7b17a7746_crop_northஅமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் நடால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் முதல் செட்டை 6க்கு 3 என நடால் எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களையும் நடால் 6க்கு 3, 6க்கு 4 என தனதாக்கினார். போட்டியின் முடிவில், நடால் 6க்கு 3, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அமெரிக்க ஓபன் பட்டத்தை 3வது முறையாக கைபற்றினார். இது நடால் வெல்லும் 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com