Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு

அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு

1.அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகத்தில் பரவலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என நேரத்தை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் மக்கள் தமிழகத்தில் ஆர்வத்தில் அவரவர் இஷ்டப்படியே பட்டாசு வெடித்தனர். தடையை மீறியதாக நெல்லையில் 6-பேர் மீதும், கோவையில் 30-பேர் மீதும், திருப்பூரில் 42-பேர் மீதும், விழுப்புரத்தில் 30-பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். சில இடங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்களை அழைத்து காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com