Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அதிரடி சரவெடி ; ஹர்திக் பாண்ட்யா அசத்தல் சதம் … | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » அதிரடி சரவெடி ; ஹர்திக் பாண்ட்யா அசத்தல் சதம் …

அதிரடி சரவெடி ; ஹர்திக் பாண்ட்யா அசத்தல் சதம் …

cricket-sri-ind_77617c80-7ff8-11e7-b5e3-d817f67cfdf5இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்தார்.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்கள் 188 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 85 ரன்களிலும் தவான் 119 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பஜாரா 8 ரன்களிலும், ரஹானே 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் கோலி 42 ரன்களிலும், அஷ்வின் 31 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னுடனும், சாஹா 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாஹா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 26, 8 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கிடைத்தப் பந்துகளை நொறுக்கித் தள்ளினார் பாண்டியா. அதிரடியாக ஆடிய அவர், 86 பந்துகளில் சதமடித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு முதல் சதம். மறுமுனையில் உமேஷ் யாதவ் 3 ரன்களில் ஆடிக்கொண்டிருக்கிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை தரப்பில் புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும், சண்டகன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com