Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » அதிமுக அரசு ஊழலின்மொத்த உருவமாக உள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

அதிமுக அரசு ஊழலின்மொத்த உருவமாக உள்ளது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

stalinஅதிமுக அரசு ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் அனைத்து நியமனங்களிலும் ஊழல் நிரம்பியுள்ளது என்றும், ஊழல் பற்றி பொதுமேடையில் ஆளுநர் பேசுவது எந்த பலனையும் கொடுக்காது என்றும் தெரிவித்தார். மேலும், துணைவேந்தர் நியமனம், டெண்டர் ஊழல்கள் உண்மை என்பது குற்றச்சாட்டிலிருந்து நிரூபணம் ஆகியுள்ளது என்றும், கடந்த ஒரு வருடத்தில் ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுக்கு நிம்மதி கிடைத்திருக்கும் என்று தெரிவித்த அவர், ஊழல் புகார்கள் மீது ஆளுநர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். ஊழல் புகாருக்குள்ளானவர்களை ஆளுநர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஊழல்களை தடுப்பது ஆளுநரின் அக்கறை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com