Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
அதிக வெப்பம் காரணமாகவே சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » அதிக வெப்பம் காரணமாகவே சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாகவே சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

fire accidentஅதிக வெப்பம் காரணமாக சிவகாசி அருகே ஏழாயிரம்பண்ணை எனும் இடத்தில் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆலையில் இரண்டு அறைகள் தரைமட்டமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு காயமும் ஏற்படவில்லை.

சாத்தூர் – சிவகாசி இடையே இருக்கிறது ஏழாயிரம்பண்ணை. அந்த ஊரில் சிவசங்கப்பட்டி எனும் இடத்தில் கண்ணன் என்பவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் 75 அறைகள் இருக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை, பட்டாசு மருந்து கலக்கும் அறையில் திடீரென உராய்வு காரணமாக தீ பிடித்தது. தீ மளமளவென 10 அறைகளுக்குப் பரவியது. அறைகளில் இருந்த தொழிலாளர்கள் விரைந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. விபத்தில், 2 அறைகள் தரைமட்டமாகின. மற்ற அறைகள் சேதமடைந்தன. அதிக வெப்பம் காரணமாகவே, பட்டாசு மருந்து கலக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வழக்கமாக இந்த பட்டாசு ஆலைக்கு 300 தொழிலாளர்கள் வரும் நிலையில், ஊரில் பொங்கல் திருவிழா என்பதால் இன்று 100 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com