Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க மிதக்கும் சூரியசக்தி நிலையம் !!

அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க மிதக்கும் சூரியசக்தி நிலையம் !!

epsதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.5,098 கோடியில் 25 புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக்கடன் வழங்கப்படும் என்றும் ஊரகப்பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்க ரூ.100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதற்கிடையே சென்னையில் 6 இடங்களில் ரூ. 932 கோடியில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் \கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அணைகளில் நீர் ஆவியாவதை தடுக்க ரூ.1,125 கோடியில் மிதக்கும் சூரியசக்தி நிலையம் அமைக்கப்படும் என்று கூறிய முதல்வர், புதிய எரிசக்தி கொள்கை ஒன்று உருவாக்கப்படும் என்றும் 1,000 அங்கன்வாடி மையங்கள் ரூ. 87 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் உரையில் தெரிவித்தார்.மேலும் தமிழகம் இன்றும் என்றும் மின்மிகை மாநிலமாக நிகழும் என்றும் நாட்டின் மின்நிறுவு திறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டி காட்டினார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com