Monday , 20 November 2017
Home » சினிமா » அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்…

அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்…

மெர்சல் படத்தை இயக்கிய அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தமிழ் திரையுலகில்Image result for atlee ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் அட்லீ. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஏற்கனவே ’தெறி’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அடுத்ததாக இவர் இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’

இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் எனக் கூறி பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சர்ச்சைகளால்  படத்தின் வசூல் சக்கை போடு போட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினி நடித்த மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமத்தை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சங்கம் அட்லீக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் ஃப்ரீ மேக்கிங் இயக்குனர் அட்லீ என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com