Thursday , 20 September 2018
Home » இந்தியா » அடிப்படையற்ற பொய்யான தகவல்-அருண்ஜெட்லி

அடிப்படையற்ற பொய்யான தகவல்-அருண்ஜெட்லி

arun-jaitleyஇந்தியாவை விட்டு வெளியேறும் முன்பு நிதி அமைச்சரை 2 முறை சந்தித்து பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்ததாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
வங்கிகளிடம் வாங்கி கடனை திரும்ப செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை, இந்தியா கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வங்கிகளிடம் கடன் வாங்கியது குறித்து பேசிய விஜய் மல்லையா,இந்தியாவை விட்டு வெளியேறும் முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை 2 முறை சந்தித்து பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். கடனை திரும்ப செலுத்துவதாக நான் வழங்கிய கடிதங்களை வங்கிகள் நிராகரித்தாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் மல்லையாவை சந்திக்க ஒருபோதும் நேரம் ஒதுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தம்மை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறியுள்ளார். மல்லையாவை சந்திக்க தாம் ஒருபோதும் நேரம் ஒதுக்கியது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மல்லையா, ஒரு நாள், அவை முடிந்து தாம் அறைக்கு திரும்பிய போது, தமக்கு பின்னால் ஓடி வந்து ஓரிரு வார்த்தைகள் பேசியதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். வங்கி கடன்களை செலுத்த சமரச தீர்வுக்கு தயாராக இருப்பதாக மல்லையாக கூறியதாகவும், இதன் வங்கி நிர்வாகங்களிடம் தெரிவிக்குமாறு கூறி விட்டு தாம் சென்று விட்டதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் என்ற சலுகையை பயன்படுத்தி, அந்த அவை வளாகத்தில் பேசிய ஓரிரு வார்த்தைகளை மல்லையா கூறுவதாகவும் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார

Facebook Auto Publish Powered By : XYZScripts.com