Monday , 23 October 2017
Home » மாவட்டம் » மதுரை » அகழ்வாராய்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை ; கீழடியில் நீதிபதிகள் ஆய்வு…

அகழ்வாராய்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை ; கீழடியில் நீதிபதிகள் ஆய்வு…

Daily_News_2017_கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அகழ்வாராய்ச்சி தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் கீழடியில் ஆய்வு மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய தொல்லியல் துறை கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நடத்திய மூன்று கட்ட அகழ்வாராய்ச்சியில் 2500  ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் 5000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் இருப்பது கண்டுப்பிடக்கப்பட்டது.

மே 27ம் தேதி தொடங்கிய 3ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்ணாடி மணிகள், பளிங்கு,பவளம், பச்சைக்கல் மற்றும் காதணிகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 3ம் கட்ட  அகழ்வாய்வை செப்டம்பர் 30ம் தேதியுடன் முடித்து கொள்ள மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ள நிலையில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து  நடைபெற  உத்தரவிட கோரி வழக்கறிஞர்  கனிமொழி மதி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் நேற்று மாலை கீழடிக்கு வந்தனர். அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது, விவசாயிகள் சார்பில் சந்திரன், நீதிபதிகளிடம் கூறுகையில், ‘‘கீழடி ஆய்வுக்காக நாங்கள் நிலம் கொடுத்துள்ளோம்.

இதற்கு முன்பு இருந்த தொல்லியல் கண்காணிப்பாளர்  அமர்நாத் ராமகிருஷ்ணா எங்களை நல்ல முறையில் அணுகி வந்தார். ஆனால் தற்போது இருக்கும் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், எங்களிடம் சரியாக நடந்து கொள்வதில்லை. எரிந்து விழுகிறார். எனவே, ஏற்கனவே இருந்தவரையே மீண்டும் நியமிக்க வேண்டும். ராமனே தொடர்ந்தால், எங்கள் நிலத்தை ஆய்வுக்கு தரமாட்டோம்,’’ என்றார்.

இதனை கேட்ட நீதிபதிகள், ‘விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். செப். 30ம் தேதியுடன் அகழாய்வு முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐகோர்ட் நீதிபதிகள் கீழடியில் ஆய்வு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com